சூரியன்
நண்பர்களே உங்களுக்கு தெரியுமா! சூரியனே நமது சூரிய குடும்பத்தின் மையப்பகுதி, காலநிலை மற்றும் வானிலை மாற்றத்திற்க்கு காரணம் நமது தலைவர் சூரியன் தான்!!!. சூரியன் ஒரு கோளம் மற்றும் நடுவரைக் கோட்டிலிருந்து சூரிய துருவங்களின் தொலைவு சராசரியாக 10கி.மீ மற்றும் ஆரம் சராசரியாக 695,508கி.மீ.
சூரியன்
வயது:4.6 பில்லியன் வருடங்கள்
வகை:மஞ்சள்+ஆரஞ்சு
சுற்றளவு:4,370,005.6 கி.மீ
விட்டம்:1,392,684 கி.மீ
நிறை:1,989,100,000,000,000,000,000 பில்லியன் கிகி (333,060 x புவி)
வெப்பம்:5500 °டி
சூரியன்க்குள் ஒரு மில்லியன் புவி அடங்கும்
வெற்றிட சூரியனுக்குள் 960,000 புவி கோளங்களை அடக்கலாம்.அதே போல் நமது புவி ஒரு வெற்றிட கோளமாக இருந்தால்,1,300,000 புவி கோளங்களை சூரியனுக்குள் அடக்க முடியும்.
முடிவாக சூரியன் நமது புவியை விழுங்கி விடும்
சூரியனில் உள்ள அனைத்து ஹைட்ரஜன்களும் தீர்ந்துவிட்டால்(எரிந்துவிடால்),ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் எல்லையானது புவி உள்ள தொலைவு வரை அதிகரிக்கும்.அப்போது சூரியன் ஒரு பெரிய சிவப்புக் கோளமாக மாறும்.ஆனால் இந்த நிலமையை சூரியன் அடைய இன்ன்ம் 130 மில்லியன் ஆண்டுகள் உள்ளன்! சூரியன் ஒரு பெரிய சிவப்புக் கோளமாக மாறிய பிறகு அதன் வளற்ச்சி குறையத் தொடங்கும் முடிவாக அது ஒரு வெள்ளைக் கோளமாக புவியின் அளவை விட சிறியதாக மாறும்.
சூரியனே நமது சூரிய குடும்பத்தில் 99.86% நிறை கொண்டது
சூரியன் நமது புவியை விட 333,000 மடங்கு அதிக நிறை கொண்டது.இதில் 3/4 ஹைட்ரஜனும் 1/4 ஹீலியமும் அடங்கும்.சூரியனிடமிருந்து புவியானது 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனின் ஒளிக்கதிரான்து 3*108 வேகத்தில் பயணிக்கும்.அது புவியை அடைய 8.20 நிமிடங்கள் ஆகும்.பால்வழி அண்டத்தின் மையத்திலிருந்து 24,000-26000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.சூரியன் ஒரு முறை அண்டத்தை சுற்றிவர 225-250 மில்லியன் ஆண்டுகள் ஆகும். சூரியனின் வேகம் சுமார் 220கிமீ/வி ஆகும்.
சூரியனின் சுடர் ஒளி
சூரியனிடமிருந்து காந்தப்புலம் வெளிப்படும்போது சூரிய அலைகள் தோண்றுகின்றன.அணுக்கரு இணைவு முறையில் ஹைட்ரஜனும் ஹீலியமும் இணைந்து அதிக சூரிய அற்றலை வெளியிடுகின்றன.சூரியனின் உள் வெப்பநிலை சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.சூரிய அலையானது 450 கி.மீ/வி என்ற வேகத்தில் பயணிக்கும்.
சூரியனை சுற்றும் கோள்கள்
பெயர்கள் | தொலைவுகள்(கி.மீ)/(வானியியல் அலகு AU) | கோள்/குறுங்கோள் |
---|---|---|
புதன் | 57,909,227 கி.மீ/ (0.39 வா.அ) | கோள் |
வெள்ளி | 108,209,475 கி.மீ/ (0.73 வா.அ) | கோள் |
புவி | 149,598,262 கி.மீ/ (1 வா.அ) | கோள் |
செவ்வாய் | 227,943,824 கி.மீ/ (1.38 வா.அ) | கோள் |
செரெஸ் | 413,700,000 கி.மீ/ (2.77 வா.அ) | கு.கோள் |
வியாழன் | 778,340,821 கி.மீ/ (5.20 வா.அ) | கோள் |
சனி | 1,426,666,422 கி.மீ/ (9.58 வா.அ) | கோள் |
யுரெனஸ் | 2,870,658,186 கி.மீ/ (19.22 வா.அ) | கோள் |
நெப்டியுன் | 4,498,396,441 கி.மீ/ (30.10 வா.அ) | கோள் |
புளூட்டோ | 5,874,000,000 கி.மீ/ (39.26 வா.அ) | கு.கோள் |
ஹீயுமியா | 6,452,000,000 கி.மீ/ (43.13 வா.அ) | கு.கோள் |
மெக்மெகெ | 6,850,000,000 கி.மீ/ (45.79 வா.அ) | கு.கோள் |
எரிஸ் | 10,120,000,000 கி.மீ/ (68.01வா.அ) | கு.கோள் |