புவி
புவியானது சூரிய குடும்பதிலிருந்து மூண்றாவது கோள் ஆகும். புவி மட்டுமே கிரேக்க அல்லது ரோம கடவுளுக்குப்பின் பெயர் சூட்டப்படாத ஒரு கிரகம் ஆகும். புவியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோண்றியதாக அறிவியல் அறிங்ஞர்கள் கூறுகிண்றனர்.நமது சூரிய குடும்பத்தில் இக்கோளில் மட்டுமே உயிர் வாழ்வதற்காண சூழ்நிலை,ஆக்ஸிஜன்,கடல் மற்றும் நில அமைப்புகள் உள்ள கோள் ஆகும். இதுவே நமது சூரிய குடும்பத்தில் 5வது பெரிய கோள் ஆகும். இது நான்கு(வியாழன்,சனி,யுரேனஸ்,மற்றும் நெப்டியுன்)) வாயு கோள்களை விட சிறியது மற்றும் நான்கு நில(புதன்,வெள்ளி மற்றும் செவ்வாய்)) கோள்களை விட பெரியது.நமது புவியின் விட்டமானது 13000 கி.மீஆனால் ஈர்ப்பு விசை யானது நமது புவியை ஒரு கோளவடிவில்(oblate spheroid)காண்பிக்கிண்றது. புவியின் நிலப்பரப்பானது 71% நீரால் நிரம்பியுள்ளது.
கோள் விவரம்
- விட்டம்
- =12,756 கி.மீ
- நிறை
- =5.97 × 10^24 கி.மீ
- நிலவு
- =1(சந்திரன்)
- சுற்று பாதையின் தொலைவு
- =149,598,262 கி.மீ (1 AU(வா.அ))
- சுற்று பாதையின் காலம்
- =365.26 நாட்கள்
- மேற்பரப்பு வெப்பநிலை
- =-88 முதல் 58°செ
- சூரியனுக்கு மிக அருகில்
- =147,098,291 கி,மீ
- சூரியனுக்கு மிக தொலைவில்
- =152,098,233 கி.மீ
- ஒரு நாள்
- =23.439 மணி நேரம்
சில உண்மைகள்
புவியானது ஒரு கற்பனை கோட்டில் சுழல்கிறது. ஒருமுறை தன்னைத் தானே சுற்ற 23.439 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் ஒரு முறை சூரியனை சுற்ற365.26 நாட்களை எடுத்துக் கொள்கிறது. வட மற்றும் தென் அரைக்கோளங்கள் காலத்திற்கு ஏற்ப சூரியனுக்கு அருகில் மற்றும் தொலைவில் அமைகிறது.ஜனவரி மாதம் முதல் சூரியனுக்கு அருகிலும் ஜுலை மாதம் முதல் சூரியனுக்கு தொலைவிலும் அமைகிறது.
நமது புவி ஆனது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோண்றியதாக அறிவியல் அறிங்ஞர்கள் கூறுகிண்றனர். சூரிய குடும்பம் ஆனது சோலார் நெபுலாவில் இருந்து தோண்றியது. நமது புவியில் கடல் ஆனது சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோண்றியதாக நம்பப் படுகிறது. புவியின் வாழ்நாள்(கால கட்டமானது) ஆனது 4 ஆக பிறிக்கப் படுகிறது.முதலில் ஹாடீன்,ஆர்சீன், ப்ரொடெர்சொயிக் மற்றும் பனரோசொயிக். இம் மூன்றும் 4 பில்லியன் ஆண்டுகள் பழமை ஆனது.நான்காவது கால கட்டமான ப்ரீகெம்ரியன் கால கட்டதில் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் உயிரினங்கள் தோண்றியதாக கூறுகிண்றனர். பனரோசொயிக் கால கட்டமானது மேலும் மூன்று கால கட்டமாக பிரிக்கப் படுகிறது. பாலியோ சொயிக், மீசோ சொயிக் மற்றும் செனோ சொயிக். பாலியோ சொயிக் கால கட்டம் தான் உயிரினங்கள் தோண்ற அடிப்படை கால கட்டமாகும். மீசோ சொயிக் கால கட்டமானது(200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்) டினோசரஸ் கால கட்டமாகும் நண்பர்களே! செனோ சொயிக் கால கட்டமானது(65 மில்லியன் ஆண்டுகளுக்கு) பாலூட்டிகளின் கால கட்டமாகும்.
வளிமண்டலம்
புவியின் வளிமண்டலத்தில் 71% நைட்ரஜனும் 21% ஆக்ஸிஜனும் இதர வாயுக்கள்(கார்பன்-டை-ஆக்சைடு,ஆர்கான் மற்றும் இதர) 1% சதவீதமும் உள்ளன.
வளிமண்டலமானது 4 அடுக்குகளாக பிரிக்கப் படுகிறது.ட்ரோபோஸ் ஸ்பியர்(0-10 கி.மீ),ஸ்ரேட்டோஸ் ஸ்பியர்(10-30 கி.மீ),மீசொஸ் ஸ்பியர்(30-50 கி.மீ),
தெர்மோஸ் ஸ்பியர்(50-400 கி.மீ) மற்றும் எக்சோஸ் ஸ்பியர்(>400கி.மீ).
ட்ரோபோஸ் ஸ்பியரில் தான் வானிலை மாற்றம் நிகழ்கிறது.ஓசோன் அடுக்கானது ஸ்ரேட்டோஸ் ஸ்பியரில் தான்
அமைந்துள்ளது.
காந்த விசை
புவியின் காந்தவிசையானது புவியின் வெளிபுறத்தில் பாயும் மின்னோட்டத்தினால் எற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வட துருவமானது
ஒரு குறிப்பிட்டதூரம்(40 கி.மீ) விலகிச் செல்கிறது.
உள்ளமைப்பு
புவியின் நிலப்பரப்பில் அதிக அளவு காணப்படும் தனிமங்களில் ஆக்ஸிஜன் 47%, சிலிக்கா 27%, அலுமினியம் 8%, இரும்பு 5%,
கால்சியம் 4%, மற்றும் இதர சோடியம்,பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் 2% உள்ளன. புவியின் கரு வானது 7100 கி.மீ
அகலமுடையது. கிட்டத்தட்ட செவ்வாய் கோளிற்குச் சமம் ஆகும். வெளிப்புறத்தின் வெப்பநிலை சுமார் 4,300 டி செ மற்றும்
உட்புற கருவின் வெப்பநிலை சுமார் 7,000 டி செ