நிலவு
![நிலவு](https://www.nasa.gov/sites/default/files/thumbnails/image/christmas2015fullmoon.jpg)
நிலா புவியைப் போலவே 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோண்றியதாக கூறுகிண்றனர் அறிவியல் அறிங்ஞர்கள். சூரிய குடும்பம் தோண்றிய பிறகு 30-50 மில்லியன் வருடங்களுக்கு பின் தோண்றியிருக்கலாம்.நிலவு ஒன்று மட்டுமே நமது புவியின் துணைக்கோளகும்.
துணைக்கோளின் விபரங்கள்
- விட்டம்
- =3475 கி.மீ
- நிறை
- =7.35 × 10^22 கி.மீ
- சுற்று பாதையின் தொலைவு
- =384,400 கி.மீ
- சுற்று பாதையின் காலம்
- =27.3 நாட்கள்
- மேற்பரப்பு வெப்பநிலை
- =-233 முதல் 123°செ
- புவிக்கு மிக அருகில்
- =363,104 கி,மீ
- புவிக்கு மிக தொலைவில்
- =405,696 கி.மீ
சில உண்மைகள்
நிலவின்- புரியாத ஒரு முகம்
நிலவு நமது துணைக்கோளக இருந்தாலும் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காணமுடியும். அதற்கு காரணம் நிலவு தன்னைதானே ஒரு முறை சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் புவியை ஒரு முறை சுற்ற எடுதுக்கொள்ளும் நேரமும் சராசரியாக இருப்பதே ஆகும்.
கடல் அலைகள்
நமது புவியானது 71% நீரால் நிரம்பியுள்ளது.நிலவின் ஈர்ப்பு விசை பெரும்பாலும் கடலின் மீது விழுகிறது. இதன் காரணமாகவே சிறிய மற்றும் பெரிய கடல் அலைகள் ஏற்படுகிண்றன. ஒவ்வொரு ஆண்டும் நிலவானது 3.8 செ.மீ புவியை விட்டு விலகிச் செல்கிறது. இவ்வாறு இருந்தால் அடுத்து 50 பில்லியன் ஆண்டுகளில் நிலவு ஒரு முறை புவியை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் 47 நாட்களாக அதிகரித்து விடும்.
நிலவில் எடை
நிலவு புவியை விட மிகக் குறைந்த நிறை கொண்டதன் காரணமாக அங்கு ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. நிலவானது புவியின் நிறையில் 16.5% நிறை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே புவியில் மிகவும் அதிக எடை கொண்ட பொருள் கூட நிலவில் மிக குறைவான எடையுடன் காணப்படும். நிலவில் வளிமண்டலமானது காணப்படாது இதனால் சூரிய கதிர் வீச்சு, காஸ்மிக் கதிர் வீச்சு, எரிகற்கள் போண்றவைகளிடம் இருந்து நிலவிற்கு விடுதலை இல்லை.மேலும் இதன் காரணமாக நிலவிலிருந்து வானம் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.
வளர்பிறை மற்றும் தேய்பிறை
புவியை போலவே நிலவில் நில நடுக்கம் ஏற்படுகிறது. இதன் மூலம் நிலவானது
புவியை போல உருகிய கருவைக் கொண்டுள்ளதாக அறிவியல் அறிங்ஞர்கள் கூறுகிண்றனர்.
நிலவானது புவியை சுற்றுவதினால் புவிக்கும் சூரியன்க்கும் இடைப்பட்ட காலம் 13.5 நாட்கள் வளர்பிறை
என்றும் புவிக்கு பின்னால் உள்ள 13.5 நாட்கள் தேய்பிறை என்றும் கூறுகிண்றனர்.
ஆராய்ச்சிகள்
1958 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் பல்வேறு பயனீர்(pioneer) செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட போதும் பெரும்பாலும் தோல்வியுற்றன. ஆனால் 1959 ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் அனுப்பப்பட லூனா 2 மற்றும் லூனா 3 என்ற செயற்க்கைக்கோள் முதன் முறையாக நிலவின் மேற்பரப்பை அடைந்தன.
1962 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அனுப்பப்பட ரேஞ்சர் வகை செயற்கைக்கோள்களும் தோல்வியில் முடிந்தன. அதே போல் 1963 ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் அனுப்பப்பட லூனா இ-6 என்ற செயற்கைக்கோள்களும் தோல்வியில் முடிந்தது. ஆனால் 1965 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அனுப்பபட்ட ரேஞ்சர் 7, 8 மற்றும் 9 என்ற செயற்க்கைக்கோள்கள் வெற்றி அடைந்தன. அதே ஆண்டு சோவியத் யூனியனால் அனுப்பப்பட லூனா 5,6,7,8 என்ற செயற்கைக்கோள்கள் தோல்வியடைந்தன, ஆனால் அதே ஆண்டு அனுப்பப்பட ஜோண்ட் 3,லூனா 9,10 செயற்கைக்கோள்கள் வெற்றிகண்டது. 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட சர்வேயர் 1 வெற்றிகண்டது இருந்த போதிலும் லூனா ஆர்பிட்டார் 1, எக்ஸ்ப்ளோரர் 33, சர்வேயர் 2 தோல்வியில் முடிந்தது.அதே ஆண்டு சோவியத் யூனியனால் அனுப்பப்பட லூனா 11 என்ற செயற்கைக்கோள் தோல்வியடைந்த போதிலும் லூனா 12,13 வெற்றிகண்டது.
1966-1967 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட லூனா ஆர்பிட்டார் 2,3,4,5,எக்ஸ்ப்ளோரர் 35 சர்வேயர் 5,6,7 செயற்கைக்கோள் வெற்றிகண்டது. 1968-69 சோவியத் யூனியனால் அனுப்பப்பட்ட ஜோண்ட் 5,லூனா 14,15 செயற்கைக்கோள்கள் வெற்றிகண்டது ஆனால் ஜோண்ட் 6 தோல்விகண்டது. அமெரிக்காவினால் ஏவப்பட்ட அப்போலோ 8,10,11,12 செயற்கைக்கோள்கள் வெற்றிகண்டது.இவ்வகை செயற்கைக்கோள்கள் தான் மனிதனை விண்ணிற்கு(நிலவிற்கு) ஏற்றி சென்றன.சோவியத் யூனியனால் அனுப்பப்பட லூனா 16,17,20,21 வெற்றிகண்ட போதிலும் லூனா 18 தோல்வியுற்றது. நமது மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியது. அதில் சான்றாயன்(2008) 1 தோல்வியுற்றது ஆனால் மூன் இம்பக்ட் பிரோப் வெற்றிகண்டது.
புவியின் உதயம்
நாம் எவ்வாறு புவியில் நிலவின் உதயம் மற்றும் சூரிய உதயங்களை காண்கிறோமோ
அதே போல் நிலவில் புவியின் உதயத்தை காணமுடியும்.
இந்த புகைப்படமானது நாசாவின் Lunar Reconnaissance Orbiter மூலம் அக்டோபர் 12/2015 எடுக்கப்பட்டது.