டெய்மோஸ்
![போபோஸ்](https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8d/Deimos-MRO.jpg)
அதிக நிலப்பரப்புடன் இரு செயற்க்கைகோள்களை கொண்ட கிரகம் செவ்வாய் மட்டுமே ஆகும். இருந்த போதும் அதன் துணைக்கோள்களான போபோஸ் மற்றும் டெய்மோஸ் எவ்வாறு உருவாயின என்று அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன.
கண்டுபிடிப்பு
ஆகஸ்ட் 12/1877 ஆண்டு அமெரிக்க விண்வெளி விங்ஞானியான ஆசப் ஹால் என்பவரால் டெய்மோஸ் மற்றும் போபோஸ் ஆகிய இரு செவ்வாயின் துணைக்கோள்கள் கண்டறியப்பட்டன
இத்துணைக்கோள்கள் கண்டறிவதற்க்கு முன்னறே ஜோகன்ஸ் கெப்லர் என்பவர் புவி ஒரு துணைக்கோளையும், வியாழன் 4 துணைக்கோளையும்,செவ்வாய் இரு துணைக்கோளையும் கொண்டிருப்பதாக முன்மொழிந்தார். இருந்தும் அதனை மெய்ப்பிக்க சான்றுகள் அக்காலகட்டதிதில் இல்லை
மேலும் இது செவ்வாயை சுற்றி 23458 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக கண்டறிந்தார்.
ஆராய்ச்சிகள்
![போபோஸ்](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/NASA-Deimos-MarsMoon-20090221.jpg/500px-NASA-Deimos-MarsMoon-20090221.jpg)
மேலும் இத்துணைக்கோள்கள்களை பற்றி அறிய ஒரு நூற்றாண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. அதுமட்டும் அல்லாமல் மரினர் 9 என்ற செயற்க்கை கோளே வேறொறு கோளை{செவ்வாய்} சுற்றி வர மனிதனால் வடிவமைக்கப்பட்ட செயற்க்கைகோள் ஆகும்.
இத்துணைக்கோள்கள்களை முதன் முதலில் பார்க்கும் போது உருளை கிழங்கு வடிவத்தில் இருந்ததாக கூறுகின்றனர்
அமெரிக்காவின் வைகிங், சோவியத் யூனியனின் போபோஸ் 2 மிஷன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் போன்றவை விரிவான விளக்கங்கள் தருகின்றன.
நாசா பல்வேறு திட்டங்களை கையில் வைத்துள்ளது.அதில் குறிப்பிடும் வகையில் உள்ளது பிஎடிஎம்இ PADME (Phobos And Deimos and Mars Environment) ஆகும். இது 2020/21 ஆண்டுகளில் அனுப்பப்பட உள்ளது.
அமைப்பு
டெய்மோஸ் ஆனது உருளை கிழங்கு வடிவிலும் கார்பனேற்றம் செய்யப்பட பாறை போனற பொருட்களால் ஆனதாக கூறுகின்றனர்
மேலும் இது வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியால் வெளியே தள்ளப்பட்டு செவ்வாய் கிரகத்தினால் ஈர்துக்கொள்ளப்பட்ட எரிகற்கள் எனவும் கூறுகின்றனர். ஒவ்வொறு 30 மணிநேரத்துக்கும் ஒருமுறை செவ்வாயை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
டெய்மோஸ் மற்றும் போபோசனது செவ்வாயை சுற்றி வந்தபோதிலும் ஒருகாலத்தில் செவ்வாயுடன் மோத வாய்பு உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் இதனை செவ்வாயின் நிலப்பரப்பில் இருந்து காணும் போது வெள்ளி கிரகம் போல் ஒளிரும் தன்மையுடையது.
![டெய்மோஸ் சூரிய கிரகணம்](https://i.ytimg.com/vi/XfvBS61PDYA/hqdefault.jpg;)
மேலும் இது செவ்வாயின் சூரிய கிரகணத்தின் போது ஒரு கரும்புள்ளி வடிவில் காட்சி அளிக்கும்.மேலும் இது எரிமலை போன்ற வாய்பகுதிகளை விண்கற்களின் மோதல் காரணமாக பெற்றுள்ளது.
![டெய்மோஸ்](https://upload.wikimedia.org/wikipedia/commons/6/6d/SwiftCrater.gif)
அவ்வாறு தோண்றிய இரு எரிமலை வாய்களின் பெயர்கள் ஸ்வீப்டு மற்றும் வோல்டையர் ஆகும். ஆங்கில ஆசிரியர் ஜோனாதன் ஸ்வீப்டு மற்றும் பிரான்சு ஆசிரியர் வோல்டையர் ஆகியோர்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளது.இவ்விரு நிலவுகளை தங்கள் கதைகளில் பயன்படுத்தியதற்காக அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது
- ஆரம்
- 6.2 கி.மீ
- செவ்வாயின் மையத்திலிருந்து தொலைவு
- :23,458 கி.மீ
- செவ்வாயிற்க்கு மிக அருகில்
- :23,458
- செவ்வாயிற்க்கு மிக தொலைவில்
- :23,458கி.மீ
- செவ்வாயை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம்:
- 30 மணி நேரம்
- நிறை
- :1.4762 x 1015 கிகி
- ஈர்ப்பு விசை
- 0.003 மீ/வி2
- அடர்த்தி
- 1.471 கி/செ3
- வெப்பநிலை
- -112 முதல் -4 செ