போபோஸ்
![போபோஸ்](https://i.imgur.com/NS0wD.jpg)
இது செவ்வாயின் துணைக்கோள் ஆகும். இது செவ்வாயிலிருந்து சில கி.மீ கள் தூரத்தில் செவ்வாயை சுற்றி வருகிறது. இதன் காரணமாக 19-ஆம் நூற்றாண்டு வரை யாரும் இத்துணைக்கோளை காணமுடியவில்லை.
17-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய விங்ஞானி ஜோகனஸ் கெப்லர் செவ்வாய் இரு துணைக்கோள்களை கொண்டிருப்பதாக கூறினார் . இருந்தும் அன்றைய காலகட்டதில் எந்த சான்றும் கிட்டவில்லை.
ஆசப் ஹால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருவரும் ஆகஸ்ட் மாதம் 12/1877 அன்று போபோஸ் மற்றும் டெய்மோஸ் என்ற இரு செயற்கைக்கோள்களை கண்டறிந்தனர்.
ஆராய்ச்சிகள்
![போபோஸ்](https://www.nasa.gov/sites/default/files/thumbnails/image/phobosincolor_pia10369.jpg)
அமெரிக்காவினால் மரினர் 9 என்ற செயற்கை கோளே மனிதனால் வடிவமைக்கப்பட்டு வேறொரு கோளை{செவ்வாய்} சுற்றி வர அனுப்பப்பட்டது. அச் செயற்கை கோள் மூலம் போபோஸின் வடிவத்தை அறிய முடிந்தது. அதனை முதன்முதலில் புகை படத்தில் பார்க்கும் போது உருளை கிழங்கு வடிவத்தில் இருந்ததாக கூறினர்.
அதன் பிறகு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு செயற்கைக்கோள்கள் -களை அனுப்பின. அதில் குறிப்பிடும் வகையில் ரஸ்சியா வின் போபோஸ் 2 மிஸ்ஸன், நாசாவின் குறியாசிட்டி போன்றவைகளாகும்.
2011 ஆம் ஆண்டு ரஸ்சியா அனுப்பிய போபோஸ் கிறுண்ட் போபோஸிற்கு சென்று விட்டு திரும்பும் போது 2014 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்க்கடலில் விழுந்து விட்டதாக கூறுகின்றனர். நாசா பல்வேறு திட்டங்களை கையில் வைத்துள்ளது .அதில் குறிப்பிடும் வகையில் உள்ளது பிஎடிஎம்இ PADME (Phobos And Deimos and Mars Environment) ஆகும். இது 2020/21 ஆண்டுகளில் அனுப்பப்பட உள்ளது.
அமைப்பு
போபோஸ் ஒரு சாம்பல் நிற மற்றும் குறைந்த பிரதிபலிப்பு உடைய துணைக்கோள் ஆகும். இது முழுக்க கார்பன் ஏற்றம் செயப்பட்ட பாறை மற்றும் கரிமச்சதுக்களால் ஆனதாக அறிவியலார்கள் கூறுகின்றனர்.
![போபோஸ்](https://orig07.deviantart.net/acbe/f/2013/308/a/1/mars_and_phobos_by_vitazheltyakov-d6t1cuu.jpg)
மேலும் இது செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையே உள்ள எரிகற்கள் சுற்றுப்பாதையில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்
ஆனால் சிலறோ அது செவ்வாயின் ஈர்ப்பு விசை காரணமாக செவ்வாய் கோளை சுற்றியுள்ள தூசுக்களலோ அல்லது பெரிய எரிகற்கள் மோதல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்
மேலும் இது ஒருநாளைக்கு செவ்வாயை மூன்று முறை சுற்றி வருகிறது. ஒவ்வொறு ஆண்டிற்கும் 1.8 செ.மீ என்ற அளவில் செவ்வாயை நோக்கி செல்கிறது. இதே வேகத்தில் ஒரு நூற்றாண்டிற்கு 6 அடி(1.6 மீ) என்ற விகிதத்தில் சென்றால் அடுத்த 50 மில்லியன் வருடங்களில் செவ்வாய் உடன் மோத வாய்ப்பு உள்ளது
- ஆரம்
- 11.1 கி.மீ
- செவ்வாயின் மையத்திலிருந்து தொலைவு
- 9,376 கி.மீ
- செவ்வாயிற்க்கு மிக அருகில்
- 9,234
- செவ்வாயிற்க்கு மிக தொலைவில்
- 9,518 கி.மீ
- செவ்வாயை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம்:
- 7.65 மணி நேரம்
- நிறை
- 1.0659 x 1016கி.கி
- ஈர்ப்பு விசை
- 0.0057 மீ/வி2
- அடர்த்தி
- 1.872 கி/செ3
- வெப்பநிலை
- -122 முதல் -4 (℃) செ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக