ஞாயிறு, 20 மார்ச், 2016

வெள்ளி

வெள்ளி

வெள்ளி

வெள்ளி கிரகமானது சூரியனிடமிருந்து இரண்டாவது உள்ள கிரகமாகும்!. 
நிலவிற்கு அடுத்து அதிக பிரகாசமானது.புவிக்கு அடுத்து நில பரப்பு கொண்ட
 கிரகமாக கருதப்படுகிறது.அதனால் இக்கோளானது புவியின் தங்கை என 
வருணிக்கப்படுகிறது நண்பர்களே!.மேலும் இதன் புற அமைப்பானது ஒளி 
ஊடுருவாத கந்தக(H2SO4) அமில அடுக்கை கொண்டு உள்ளது.

கோள் விவரம்

விட்டம்
=12,104 கி.மீ
நிறை
=4.87 × 10^24 கி.மீ (0.82 புவி
நிலவு
=0
சுற்று பாதையின் தொலைவு
=108,209,475 கி.மீ (0.73 AU(வா.அ))
சுற்று பாதையின் காலம்
=225 நாட்கள்
மேற்பரப்பு வெப்பநிலை
=462
சூரியனுக்கு மிக அருகில்
=107,476,000 கி,மீ
சூரியனுக்கு மிக தொலைவில்
=108,942,000 கி.மீ
ஒரு நாள்
=243 புவி நாட்கள்

இயற்பியல் பண்புகள்

இங்கு ஒரு ஆண்டு என்பது 225 புவி நாட்க்களுக்கு சமம் ஆகும். ஆனால் ஒரு நாள் என்பது 243 புவி நாட்களுக்கு சமம். அதாவது வெள்ளி ஒரு முறை தன்னைத் தானே சுற்ற 243 புவி நாட்களை எடுத்துக் கொள்கிறது நண்பர்களே!. ஆனால் ஒரு முறை சூரியனை சுற்ற 225 புவி நாட்களை எடுத்துக் கொள்கிறது.அது மட்டுமில்லாமள் இது சூரியனுக்கு எதிர் திசையில் சுற்றி வருகிறது, அதாவது சூரியன் உதிற்பதோ மேற்கில் ஆனால் மறைவதோ கிழக்கில் நண்பர்களே! . ஒரு முறை சூரியன் உதிக்க 117 புவி நாட்கள் ஆகும். Sister Of Earth

இது புவியின் நிறையில் 81.5% கொண்டுள்ளது. புவிக்கும் வெள்ளிக்கும் 638 கி.மீ விட்டம் மட்டும் வேறுபட்டிருக்கிறது. மேலும் இதன் ஒளிர்வு அளவு -4.6 முதல் -3.8 வரை ஆகும். எனவே இதனை பகல் நேரங் களிலும் காண முடியும். மேலும் இதன் வளிமண்டல அழுத்தமானது புவியின் வளிமண்டல அழுத்தத்தை விட 92% அதிகம். அதாவது வெள்ளியின் மேற்பரப்பில் உணரும் அழுத்தமானது புவியின் கடலடியில் உணரும் அழுத்ததிற்குச் சமம் ஆகும்.

நமது சூரிய குடும்பத்தில் அதிக வெப்பநிலை உள்ள கோள் வெள்ளி ஆகும். அதற்கு காரணம் பசுமை இல்ல விளைவு. வெள்ளி கோளில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கந்தக அமிலம் காணப்படுகிறது. வெப்பநிலை சுமார் 465 டி செ ஆகும்.

மேலும் வெள்ளி கோளில் மலை தொடர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒன்று 870 கி.மீ உயரம் உடையது அதன் பெயர் மாக்ஸ்வெல் ஆகும்.

வாயுக்கலவை மற்றும் கட்டமைபு

இதன் வளிமண்டல அடுக்கில் 96% கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் 3.5% மற்றும் மிகக் குறைந்த அளவில் கார்பன்-மோநோ-ஆக்சைடு,நியான்,ஆர்கான் மற்றும் சல்பர்-டை-ஆக்சைடும் காணப்படுகிறது!. காற்றானது 360 கி.மீ/நே என்ற வேகத்தில் வீசுவதாக கண்டறியப்பட்டுள்ளது. காந்த விசையானது ௦.௦௦௦௦15 புவியின் காந்த விசைக்கு சமம் ஆகும்.

ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

அமெரிக்கா,ரஸ்யா மற்றும் ஐரோபா விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்றவை என்னற்ற செயற்க்கைக் கோள்களை வடிவமைத்தன.நாசா-வின் மெரின்ர் 2 என்ற விண்கலம் முதன் முறையாக 1962-ம் ஆண்டு ஏவப்பட்டது. ரஸ்யா வின் வெனேரா 9 முதன் முறையாக வெள்ளியின் புகை படங்களை அனுப்பியது மற்றும் ஐரோபா வின் வீனஸ் எக்ஸ்பிரஸ் எட்டு முறை வெள்ளியின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. ஜப்பான் 2010-ம் ஆண்டு அகட்சுகி என்ற செயற்க்கைக் கோளை ஏவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக