ஞாயிறு, 13 மார்ச், 2016

புதன்

புதன்

புதன்

சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கோள் புதன் ஆகும் நண்பர்களே! இக்கோள் சூரியனுக்கு மிகவும் அருகில் இருப்பதனால் இக்கோளை காண்பது மிகவும் 
கடிணம். எப்போதும் இக்கோள் சூரியனை தொடர்ந்து செல்வதால் இக்கோளை புவியிலிருந்து காண்பது மிகவும் கடிணம். 100 ஆண்டுக்கு 13 முறை மட்டுமே 
புவியிலிருந்து காணமுடியும். இதனை மே 9,2016 காணமுடியும்.

கோள் விவரம்

விட்டம்
=4,879 கி.மீ
நிறை
=3.29 × 10^23 கி.மீ (0.06 புவி
நிலவு
=0
சுற்று பாதையின் தொலைவு
=57,909,227 கி.மீ (0.39 AU(வா.அ))
சுற்று பாதையின் காலம்
=88 நாட்கள்
மேற்பரப்பு வெப்பநிலை
=-173 to 427°செ
சூரியனுக்கு மிக அருகில்
=46,000,000 கி,மீ
சூரியனுக்கு மிக தொலைவில்
=69,820,000 கி.மீ
ஒரு நாள்
=58.64 புவி நாட்கள்

சில உண்மைகள்

புதன் கோளில் ஒரு நாள் என்பது 59 புவி நாட்களுக்கு சமம் ஆகும் மற்றும் இது சூரியனை சுற்றிவர 88 புவி நாட்கள் ஆகும்..சூரியனிடம் இருந்து குறைந்த மற்றும் அதிக தொலைவுகள் முறையே 46 லிருந்து 70 மில்லியன் கி.மீ ஆகும். .இக்கோள் நிலநடுக்கோட்டிலிருந்து 4879 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் நமது புவியோ 12,742 கி.மீ தொலைவில் உள்ளது நண்பர்களே!.புவிக்கு அடுத்து அதிக அடர்த்தியான கோள் புதன் ஆகும். இது பெரும்பாலும் பாறை மற்றும் உலோகத்தினால் ஆனது.புதனின் கரூவூலம் பெரும்பாலும் இரும்பாலானது.

வளிமண்டலம்

இது மெல்லிய வளிமண்டலத்தை கொண்டிருப்பதாக அறிவியலாலர்கள் கூறுகிண்றனர். இக்கோளானது புவியின் ஈர்ப்பு சக்தியில் 38% கொண்டுள்ளது. இந்த ஈர்ப்பு சக்தி போதாததால் வாயுக்கள் அனைத்தும் விண்வெளியில் சிதறடிக்கப்படுகிண்றன.இருப்பினும் தூசி வாயுக்களை கொண்டுள்ளது.

எரி மலைகள்

புதன் கோளானது பெரும்பாலும் பாறை குழம்புகளால் ஆனது. எனவே இது எரிமலைகளை பெற்று இருக்கலாம் என்று அறிவியலாலர்கள் கூறு கிண்றனர்.

ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

முதன் முதலில் புதன் கோளை ஆராய சென்ற செயற்கைக்கோள் மெரினர் 10 ஆகும். இது நாசா(NASA)வாள் 1974 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.இது 45 சதவீதம் புதனின் மேற்பரப்பையும் புதனின் காந்த சக்தியையும் கண்டுபிடித்தது. இரண்டாவது முறையாக மெசன்சர்(MESSENGER) என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக