ஞாயிறு, 26 ஜூன், 2016

Mr.Mars

செவ்வாய்

செவ்வாய்

செவ்வாய்

இக்கோளானது சூரியனிடமிருந்து நான்காவது கோள் ஆகும் நண்பர்களே!. இதுவே நமது சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோள் ஆகும்.ரோமானிய போர் கடவுளின் பெயரான "மார்ஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதனால் சிவப்புக்கோள் எனவும் அளைக்கப்படுகிறது.

செவ்வாயின் சுயவிபரம்

விட்டம்
=6752 கி.மீ
நிலவுகள்
=2(போபோஸ் மற்றும் டெய்மோஸ்)
நிறை
=6.39 × 10^23 கி.மீ
சுற்று பாதையின் தொலைவு
=227,943,824 கி.மீ
சுற்று பாதையின் காலம்
=687 நாட்கள்
மேற்பரப்பு வெப்பநிலை
=-87 முதல் -5°செ
சூரியனுக்கு மிக அருகில்
=206,600,000 கி,மீ
சூரியனுக்கு மிக தொலைவில்
=249,200,000 கி.மீ

சில உண்மைகள்

பாறை படிவுகள்

பாறை படிவுகள்
செவ்வாயின் சிவப்பு நிற தோற்றத்திற்க்கு காரணம் அங்கு உள்ள இருப்புத்தாதுக்கள் ஆகும் நண்பர்களே. இரும்பு மற்றும் இரும்புத்தாதுவான இரும்பு ஆக்ஸைடு காரணமாகவே சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதாக நாசா விங்ஞானிகள் கூறுகின்றனர்.செவ்வாயின் நில அமைப்பானது கிட்டதட்ட ஒரு பாலை வனம் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் மட்டுமே நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாகிற்கும் உயரமான மலைகளுக்கும் இருப்பிடமாகும்.


வேல்ஸ் மரினரீஸ்

அங்கு உள்ள "ஒலிம்பஸ் மான்ஸ்" என்ற மலையானது 27 கி.மீ உயரமுடையது. கிட்டதட்ட நமது எவரெஸ்ட் சிகரத்தைவிட 3 மடங்கு உயரமானது.மேலும் அங்கு உள்ள "வேல்ஸ் மரினரீஸ்" என்ற பள்ளத்தாக்கானது கிட்டதட்ட 10 கி.மீ அழமுடையது.
ஒலிம்பஸ் மான்ஸ்

செவ்வாயின் வட மற்றும் தென்னரைக்கோளமானது மென்மையாகவும் மெலிந்தும் காணப்படுகிறது. மிகவும் அகன்ற எரிமலைவாய்களையும் கொண்டுள்ளது. அதில் "ஹெல்லஸ் பிளனிடியா" 2300கி.மீ அகன்ற எரிமலைவாயை கொண்டது. எரிமலை வாய் பகுதிகள் சேறு நிரம்பியுள்ளதாள் செவாயின் நிலத்தடியில் நீர் இருக்கலாம் என அறிவியல் விங்ஞானிகள் கூறுகின்றனர்.

வானிலை

செவ்வாயின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகளவில் காணப்படுகிறது. அவ்வாறு இருந்தபோதிலும் அங்கு மேக மூட்டம்,பனி மூட்டம் ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உள்ளதாக விங்ஞானிகள் கூறுகின்றனர்."மார்ஸ் ரிகணைசன்ஸ் அர்பிட்டார் (Mars Reconnaissance Orbiter)" கார்பன்-டை-ஆக்ஸைடு பனிதுகள்களை கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். அது கூட பாரவாயில்லை அங்கு உருவாகும் புகை மூட்டம் செவ்வாய் கோளை முழுவதும் மூடிவிடுமாம் நண்பர்களே!

கட்டுமானம் மற்றும் அமைப்புகள்

கார்பன்-டை-ஆக்ஸைடு=95.32% நைட்ரஜன்=2.7% ஆர்கான்=1.6% ஆக்ஸிஜன்:0.13% கார்பன்-மோனோ-ஆக்ஸைடு=0.08% மற்றும் இதர வாயுக்கள் மிக குறைந்த அளவும் காணப்படுகின்றன

காந்த சக்தி

தற்போது செவ்வாயில் எந்த ஒரு காந்தவிசையும் காணப்படவில்லை. இருப்பினும் மேலோடானது புவியின் ஈர்ப்பு சக்தியை விட 10 மடங்கு ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருந்திருக்கலாம் என விங்ஞானிகள் கூறுகின்றனர்

ஆய்வுகள்

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் முதன்முதலில் செவ்வாய் கோளை தொலைநோக்கியில் பார்த்தவர் கலிலியோ கலிலி ஆவார்.செவ்வாயின் மேற்பரப்பை ஆராய அமெரிக்கா பல்வேறு மரினர் செயற்கைக்கோள்களை 1960-71 ஆண்டுகளில் அனுப்பியது. மரினர் 9 செயற்கைக்கோளானது 80% அளவில் முழுவதும் அறிந்தது. 1976-ஆம் ஆண்டு அனுப்பப்பட வைகிங் 1 செவ்வாயின் நிலப்பரப்பை அடைந்து புகைப்படதை அனுப்பியது நண்பர்களே!

2001 ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்ட மார்ஸ் ஓடிசி செவ்வாயின் நிலத்தடியில் பனி படலம் இருப்பதாக அறிவித்தது.2003 ஆம் ஆண்டு அனுப்பப்பட "இஸ்ஃப்ரிட் (Spirit)" மற்றும் "அப்பர்ச்னுடி (Opportunity)" என்ற செயற்க்கைக்கோள்கள் நிலப்பரப்பில் நீர் இருக்கிறதா என்று அறிவதற்காக அனுப்பப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அனுபப்பட்ட"மார்ஸ் குறியாகிட்டி (Mars Curiosity)" என்ற விண்கலம் சேவாயில் உயிர் வாழமுடியுமா என்று அறிவதற்காக அனுப்பப்பட்டது.
Curiosity

நாம் பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவின் "மங்கல்யாண்" வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதையில் (24/09/2014) நிலைநிறுத்தப்பட்டது.
மங்கல்யாண்

சூரியனின் உதயம் மற்றும் மறைவு

சூரியனின் மறைவு


இப்புகைப் படமானது மார்ஸ் குரியசிட்டி ("Curiosity") என்ற சுற்றிதிரியும் ரோபோ மூலம் 15/04/2015 எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக