செரேஸ்
நமது பூமி மற்றும் செவ்வாயிற்கு அண்மையில் உள்ள குறுங்கோள் செரேஸ் ஆகும். மற்றும் எரிகற்களின் சுற்றுப்பாதையில் இதுவே பெரிய கோள் ஆகும்.
இது நமது பூமியைப்போலவே தட்டையான கோள வடிவமுடையது. விஞ்ஞானிகள் ஒருகாலத்தில் செரேஸில் கடல்கள் மற்றும் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருந்திருக்கலாம் என சிந்திக்கின்றனர்
பிரகாசிக்கும் புள்ளிகள் மற்றும் தனியான மலைகள்
மார்ச் 6/2015 அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பிய டவ்ன்(DAWN) விண்கலமானது வெஸ்டா மற்றும் செரெசை ஆராயச் சென்றது.
செரேசின் மேகக்கூட்டங்களில் தண்ணீர் இருப்பதாக கண்டறிந்த போதும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
செரேஸில் 130 க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும்
புள்ளிகள் இருப்பதாக கண்டறிந்தது. இதன்
காரணமாக அங்கு எரிமலைகள்
இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்
6437 மீ உயரமுடைய பிரமீடு வடிவமுடைய
மலைகள் இருக்கலாம் என கூறுகின்றனர்
ஆனால் தற்போதைய ஆய்வுகள் அந்த பிரகாசமான புள்ளிகளுக்கு காரணம் அங்கு ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட மெக்னீசிய சல்பேட் என்ற உப்பு படிவங்களாகும் என்று கூறுகின்றன.
அங்குள்ள குறைவான அடர்தியின் காரணமாகவே அங்கு நிலத்தடியில் அதிகளவு நன்னீர் இருக்கலாம் எனவும் கூறுகின்றன
ஏதாவது பெரிய பொருட்களால் மோதல் ஏற்பட்டால் உள்ளிருக்கும் உரைத்த பகுதிகள் வெளிய வரலாம் எனவும் கூறுகின்றன. அதன் காரணமாக நன்னீர் உருவாகலாம்.
கண்டுபிடிப்பு
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விங்ஞானிகள் செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையில் ஏதோ ஒரு கோள் இருப்பதாக உணர்ந்தனர்.
ஜனவரி 1/1801 ஆம் ஆண்டு சிசிலியன் விங்ஞானி குஷிஃப்பெ பியாசி முதன் முதலில் செரேஸ் கோளை கண்டறிந்தார்
2006ஆம் ஆண்டுதான் செரெசை ஒரு குறுங்கோள் என ஏற்றுக்கொண்டனர். இது ஒரு கோளாக மாறாததற்கு காரணம் அருகில் உள்ள சிதைந்த கழிவுகள் மற்றும் அருகில் உள்ள மற்ற கோள்களின் தாக்கம் மற்றும் எறிகற்களின் தாக்கம் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்
மேலும் இங்கு ஒரு நாள் என்பது புவியின் மணி நேரத்தைவிட 9 மணி நேரம் அதிகமாக உள்ளது. மேலும் ஒரு வருடம் என்பது 4.6 ஆண்டுகள் ஆகும்.
பூமியின் தண்ணீர் மூல ஆதாரம்
எரிகற்களின் பாதையில் செரேசில் மட்டுமே
பனிக்கட்டி படிந்த மேக கூட்டங்கள் இருப்பதாக
கண்டறிந்தனர். அதேபோல் மேகக்கூட்டங்கள்
படிந்த எரிகற்கள் மோதல் காரணமாகவே
புவியில் நீர் தோண்றியிருக்கலாம் எனக்கூறுகின்றனர்
குறுங்கோள் விவரம்
- விட்டம்
- =950 கி.மீ
- நிறை
- =8.96 × 1020 கி.மீ (0.01 நிலா)
- நிலவு
- =0
- சுற்று பாதையின் தொலைவு
- =413,700,000 கி.மீ (2.8 AU(வா.அ))
- சுற்று பாதையின் காலம்
- =1,680 நாட்கள்
- மேற்பரப்பு வெப்பநிலை
- =-105ªC
- சூரியனுக்கு மிக அருகில்
- =382,620,000 கி,மீ
- சூரியனுக்கு மிக தொலைவில்
- =445,410,000 கி.மீ
- ஒரு நாள்
- =34 மணி நேரம்